எனக்கும் காதல் வந்துள்ளது – கர்ணன் பட நடிகை ஓபன் டாக்..!!
அனைவர்க்கும் காதல் வருவது போல் எனக்கும் காதல் வந்துள்ளது என்று நடிகை ரஜிஷா விஜயன் கூறியுள்ளார்.
நடிகை ரஜிஷா விஜயன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்கிறார். தற்போது தமிழில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகை ரஜிஷா விஜயன் கூறியது ” எனக்கு சொந்த ஊர் கேரளா மாநிலம் கொச்சி நான் நடிப்பதற்கு முன்பு கேரளாவில் உள்ள கல்லூரியில் எம்.ஏ. படித்தேன். சில மலையாள திரைப்படங் களிலும் நடித்துள்ளேன். அனைவர்க்கும் காதல் வருவது போல் எனக்கும் காதல் வந்துள்ளது. எனக்கு ஒரு நெருக்கமான நண்பர் உள்ளார். அவர் யார் என்ன செய்கிறார் என்பதை இப்பொது சொல்லமாட்டேன். என்றும் கூறியுள்ளார்.
அதற்கு பிறகு அவரிடம் தனுஷுடன் நடித்தது குறித்த அனுபவத்தை கேட்டகப்பட்டது இதற்கு பதிலளித்த அவர் கூறியது ” நான் தனுஷ் சார் நடித்த அசுரன் திரைப்படத்தை பார்த்தேன். அந்த படத்தில் அவரது நடிப்பை பார்த்து விட்டு அசந்துபோய்ட்டேன். நான் தனுஷ் சாருக்கு ஜோடியாக இவ்வளவு சீக்கிரம் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. அவரும் நடித்தது மிகவும் மகிழ்ச்சி” என்றும் கூறியுள்ளார்.