#CricketBreaking: பெங்களூர் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது
பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் க்கு இடையேயான முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் வைத்து நடைபெற்றது.டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
மும்பை இந்தியன்ஸ் போராட்டம் :
அதன் படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய கிறிஸ் லயன் 49 அதிகபட்சமாக எடுத்துள்ளார்.அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 31 ,இஷான் கிஷன் 28 மற்றும் ரோஹித் ஷர்மா 19 ரன்களை எடுத்துள்ளனர்.
பெங்களூரு அணியில் ஹர்ஷல் படேல் 4 ஓவர்கள் வீசி 27 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார்.அவரைத் தொடர்ந்து கைல் ஜேமீசன், வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
பெங்களூரு அணியின் வெற்றி :
160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் விராட் கோலி களமிறங்கினர்.பெங்களூர் அணியில் ஏபி டி வில்லியர்ஸ் 18 ,க்ளென் மேக்ஸ்வெல் 39,விராட் கோழி 33 ரன்களை எடுத்தனர் மற்ற அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த சீசனுக்கான முதல் ஆட்டத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் மார்க் ஜான்சன் தலா 2 விக்கெட்களையும் ,கிருனல் பாண்ட்யா மற்றும் ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.