முதன் முதலாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியா பவானி சங்கர்..!!
கொலை வழக்கு கண்டறியும் நிபுணராக வெப் சீரிஸில் நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் கடைசியாக வெளியான களத்தில் சந்திப்போம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்ததாக குருதி ஆட்டம் , கசட தபற, பொம்மை, ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.
இதுமட்டுமின்றி இந்தியன் 2, ருத்ரன், ஓ மண பெண்ணே போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து தற்போது ஒரு புதிய திரைப்படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
ஆம், அந்த படத்தை நயன்தாராவை வைத்து ஐரா படத்தை இயக்கிய சர்ஜுன் கே.எம் இயக்கவுள்ளதாகவும், திரில்லர் கதையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கொலை வழக்கு கண்டறியும் நிபுணராக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் இதற்கான படப்பிடிப்பு ராமேஸ் வாரத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதுவரை கதாநாயகியை தவிர்த்து மற்ற கதாபாத்திரத்தில் நடிக்காத பிரியா பவானி சங்கர் முதன் முதலாக கொலை வழக்கு கண்டறியும் நிபுணராக வெப் சீரிஸில் நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.