தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்.!
வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சுழற்சி நிலவுவதால் வருகின்ற 13ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தென் மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்கள் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
ஏனைய, மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னையில் இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இரு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1முதல் 2டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.