சென்னையில் நாளை முதல் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்படும்- போக்குவரத்துக் கழகம்!
பேருந்துகளில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் விதமாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நாளை முதல் கூடுதலாக 400 பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில் நான் ஒன்றுக்கு 3,500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்தவகையில், மாவட்ட, மாநகர பேருந்துகளில் பயணிகள் நின்று பயணிக்க அனுமதி இல்லை என்றும், இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து பயணிக்க அனுமதி என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பேருந்துகளில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் விதமாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நாளை முதல் கூடுதலாக 400 பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் கூட நெரிசல் குறையும் என்றும், அரசு அறிவித்தபடி பயணிகள் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க முடியும்.