பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதியை கூறிய கார்த்தி..??
பொன்னியின் செல்வன் திரைப்படம் 2022 பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸிற்கு எதிர்ப்பார்க்கலாம் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, நடிகை நயன்தாரா,அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ரஹ்மான், ஜெயராம் போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.
இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பானது கடந்தாண்டு தாய்லாந்தில் வைத்து தொடங்கப்பட்டது.அதன் பின் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்ட படத்தின் படப்பிடிப்பை ஜனவரியில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து மீண்டும் தொடங்கப்பட்டது. அது சமீபத்தில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது நடிகர் கார்த்தி சமீபத்தில் நேர்காணல் மூலம் தெரிவித்தது.
” பொன்னியின் செல்வன் திரைப்படம் அழகாக தயாராகி வருகிறது. இதுவரை 70% படப்பிடிப்பு முடிந்துள்ளது. கொரோனா பிரச்சனையால் படத்தின் சில வேலைகள் தாமதம் ஆகிறது. படத்தை 2022 பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸிற்கு எதிர்ப்பார்க்கலாம்” என கூறியுள்ளார்.