பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக ஆளுநர் பகிரங்க மன்னிப்பு!எனது பேத்திபோல் நினைத்து கன்னத்தில் தட்டினேன்!ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

Default Image

பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் தமிழக  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என கூறியுள்ளார்.. தனக்கு 78 வயது ஆவதாலும் பேரன் பேத்திகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் ஆளுநர் பேசிக்கொண்டே பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தில் தட்டினார்.இதனால் அந்த பெண் நிருபர் கடும் கோபமடைந்தார்.

இது குறித்து பெண் நிருபர் தனது ட்விட்டர் பக்கத்தில், “செய்தியாளர் சந்திப்பு முடியும் தருவாயில் ஆளுநரிடம் நான் ஒரு கேள்வி எழுப்பினேன். ஆனால், என்னுடைய கேள்விக்கு பதில் அளிக்காமல் ஒரு அதிகாரி என்ற தோரணையில் என் கன்னத்தில் தட்டி அமைதிப்படுத்தினார். என்னுடைய அனுமதி இல்லாமல், என்னுடையா தாத்தா போன்ற வயதுடையவர் என கூறிக் கொண்டு கன்னத்தில் தட்டுவது அவருக்கு சாதாரணமாக இருக்கலாம் , ஆனால் என்னை பொறுத்தவரை அது தவறு” என்று பகிர்ந்திருந்தார்.

மேலும் “தனக்கு அறிமுகம் இல்லாத ஒரு நபரின் அதுவும் ஒரு பெண்ணின் கன்னத்தை அவரது அனுமதி இல்லாமல் தொடுவது முறையான நடத்தை அல்ல.என்னுடைய முகத்தை நான் பல முறை கழுவி விட்டேன். இருந்தால் என்னால் அதில் இருந்து மீள முடியவில்லை. அதனால் கோபமும் ஆத்திரமும் அடைந்தேன், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இதுஒரு தாத்தாவை போன்ற அணுகுமுறையாக இருக்கலாம். என்னைப் பொருத்த வரை அது தவறு” என்றும் அந்த செய்தியாளார் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்.மேலும் அவர் கேள்வியை பாராட்டும்விதமாகவே  எனது பேத்திபோல் நினைத்து கன்னத்தில் தட்டினேன்,மேலும்  செய்தியாளர் சந்திப்பில் நல்ல கேள்வி கேட்டதற்காக பாராட்டி கன்னத்தில் தட்டினேன் என்று  ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்