பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் இன்று ஆலோசனை…!

கொரோனா 2-வது அலையின் தாக்கம் வேகமெடுத்துள்ள நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன், இன்று பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், கொரோனா 2-வது அலையின் தாக்கம் வேகமெடுத்துள்ள நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன், இன்று பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்கிறார். காணொளி மூலம் நடத்தப்படும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தொற்று மற்றும் தடுப்பூசி விநியோகம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025