செவ்வாய் கிரகத்தில் வானவில்லா?..வைரலாகும் புகைப்படம்-நாசா விளக்கம்..!

செவ்வாய் கிரகத்தில் ‘வானவில்’ இருப்பது போன்று வெளியானப் புகைப்படம் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் டிரெண்டிங்கில் உள்ளது.அது எப்படி சாத்தியமாகும்? என நெட்டிசன்கள் கேள்வி.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா கடந்த மாதம்,பெர்சிவரென்ஸ் ரோவரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைத்தது.தற்போது அந்த ரோவர் அனுப்பிய புகைப்படத்தில் வானவில் இருப்பது போன்ற காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இயற்கையாகவே மழை மற்றும் வெயில் அடிக்கும்போதே வானவில் தோன்றும்.ஆனால் இவை செவ்வாய்கிரகத்தில் எப்படி சாத்தியமாகும் என சமூக ஊடகங்களில் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ,”செவ்வாயில் வானவில் ஏற்பட வாய்ப்பில்லை,கேமராவின் லென்ஸ் விரிவடையும் போது சூரிய ஒளிக்கதிர்கள் லென்சின் மீதுபடுவதால் ஏற்பட்ட ஒளியின் காரணமாகவே புகைப்படம் அவ்வாறு வந்துள்ளது”,என்று நாசா விளக்கமளித்துள்ளது.