#Breaking: “தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கா? வாய்ப்பே இல்லை”- சுகாதாரத்துறை விளக்கம்!
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என சமூகவலைத்தளங்களில் பரவிவரும் தகவல்கள் அனைத்தும் வதந்தி என சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக, நான் ஒன்றுக்கு 3,500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.
தேர்தலுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரவிவரும் நிலையில், அவை அனைத்தும் வதந்தி என சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க சில கட்டுப்பாடுகள் மட்டும் விதிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.