யுவன் இசையில் இளையராஜா குரலில் வெளியானது மாமனிதன் படத்தின் முதல் பாடல்..!!
மாமனிதன் திரைப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மாமனிதன் . இந்த திரைப்படம் சீனு ராமசாமி-விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காய்த்ரி நடித்துள்ளார். இந்த படத்திற்கு முதன் முதலாக இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டே முடிவடைந்த நிலையில், ஒரு சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த தற்போது திரைப்படத்திற்கான முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Here we go!#MaaManithan First Single!
Thattiputta -out now!https://t.co/rKVkTjRhzE@VijaySethuOffl @seenuramasamy @U1Records @SGayathrie @mynnasukumar@YSRfilms @donechannel1 @divomovies @CtcMediaboy
— Raja yuvan (@thisisysr) April 7, 2021