மாமனிதன் அப்டேட் மாலை 4 மணிக்கு காத்திருக்கும் இசை விருந்து..!
மாமனிதன் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மாமனிதன் . இந்த திரைப்படம் சீனு ராமசாமி-விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காய்த்ரி நடித்துள்ளார். இந்த படத்திற்கு முதன் முதலாக இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டே முடிவடைந்த நிலையில், ஒரு சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த தற்போது திரைப்படத்திற்கான முதல் பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
படத்தில் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளதால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகியுள்ளது என்றே கூறலாம். மேலும் இந்த பாடலை பார்க்க இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
Maestro #Ilaiyaraaja & Young Maestro @thisisysr joining for the first time to create history.#ThattipPuttaThattipPutta first single from #MaaManithan releasing tomorrow @VijaySethuOffl @seenuramasamy @SGayathrie @mynnasukumar @YSRfilms @donechannel1 @divomovies @CtcMediaboy pic.twitter.com/YtmbpDXn0F
— U1 Records (@U1Records) April 6, 2021