எட்டயபுரத்தில் தொடங்கியது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் ..!

Default Image

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலர் வைகோ எட்டயபுரத்தில் பிரசாரம் செய்தார்.
எட்டயபுரம், புதூர், நாகலாபுரம், விளாத்திகுளம், சூரன்குடி, வைப்பார், குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வைகோ பிரசாரம் மேற்கொண்டார். எட்டயபுரத்தில் அவர் பேசியதாவது: ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்து, கொண்டுவந்தது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தான். தற்போது ஆலை விரிவாக்கத்துக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்கவில்லை என தமிழக அரசு கூறுவது ஓர் ஏமாற்று வேலை. தமிழக அரசு மோடி சொல்வதை கேட்டு அனுமதி அளித்து விடும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது தான் எங்களின் பிரதான கோரிக்கை.
வரும் 28ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெறுகிற ஸ்டெர்லைட் எதிர்ப்பு திறந்த வெளி மாநாட்டு பொதுக்கூட்டத்துக்கு பின்னரும் நிரந்தரமாக மூடவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கையாக பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி போராடுவோம். எந்த அடக்குமுறை வந்தாலும் உடைத்து எறிந்து விட்டு ஸ்டெர்லைட் ஆலையை அகற்றாமல் விடமாட்டோம் என்றார்.
நிகழ்ச்சியில், மதிமுக ஒன்றியச் செயலர்கள் பிரபாகரன், எரிமலை வரதன், மாவட்ட மாணவரனி செயலர் ராஜசேகரன், காளிதாஸ், குறிஞ்சி, மணிராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதற்கிடையே, குளத்தூரில் செவ்வாய்க்கிழமை இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட வைகோ வாகனத்தின் மீது சோடாபாட்டில் வீசப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இரண்டாம் நாளாக புதன்கிழமை மாலை 4 மணியளவில் கரிசல்குளம், காமநாயக்கன்பட்டி, பசுவந்தனை, ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், குறுக்குச்சாலை ஆகிய இடங்களில் வைகோ பிரசாரம் மேற்கொள்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்