“நான் சைக்கிளில் வந்ததற்கான காரணம் இதுதான்”- நடிகர் விஜய் தரப்பில் விளக்கம்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார். தற்பொழுது அதற்கான காரணம் குறித்து அவரின் பி.ஆர்.ஓ. விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்காத நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். மேலும், காலை முதலே பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரி அனைவரும் வரிசையில் நின்று, ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
அந்தவகையில், சினிமா பிரபலங்களான நடிகர் அஜித், கமல், ரஜினி, சிவகுமார், கார்த்தி, சூர்யா ஆகியோர் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றியுள்ளனர். இதனைதொடர்ந்து நடிகர் விஜய், தனது வீட்டில் இருந்து சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் சைக்கிளில் வந்து வாக்களித்தார். இதுதொடர்பான விடீயோக்க மற்றும் புகைப்படங்கள், சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வ் காரணமாக நடிகர் விஜய் சைக்கிளில் வந்ததாக தகவல்கள் பரவியது. இதுகுறித்து நடிகர் விஜய் தரைபோல் விளக்கமளிக்கப்பட்டது. வீட்டிற்கு அருகிலே வாக்குச்சாவடி இருந்த காரணத்தினாலும், சிறிய தெருவில் காரை நிறுத்த முடியாத காரணத்தினால் அவர் சைக்கிளில் வந்தார் என அவரின் பி.ஆர்.ஓ. விளக்கமளித்துள்ளார்.