மராட்டிய உள்துறை அமைச்சர் ராஜினாமா ..!
மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அனுப்பினார்.
மகாராஷ்டிரா உள்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அனில் தேஷ்முக் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு இன்று அனுப்பினார். சமீபத்தில் உள்துறை அமைச்சர் 100 கோடி மாமூல் வசூல் செய்து தர வேண்டும் என முன்னாள் மும்பை காவல்துறை ஆணையரிடம் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டு காரணமாக ராஜினாமா செய்தது மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.