#ELECTIONBREAKING: 80 வயது மேற்பட்டோருக்கு இலவச வாகன வசதி அறிவிப்பு..!

Default Image

80 வயது மேற்பட்டோருக்கு இலவச வாகன சேவையை தர “ஊபர்” நிறுவனம், இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளது.

தமிழகத்தில் நாளை மறுநாள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து இந்த சட்டப் பேரவை தேர்தலுக்கான பரப்புரை இன்று இரவு ஏழு மணி உடன் அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பரப்புரையை நிறுத்திக்கொண்டனர். இந்நிலையில், தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது ஜனநாயக உரிமையை மக்கள் நிறைவேற்றுவதற்கும் ஜனநாயகக் கடமையை செயல்படுவத்துவதற்கும் ஏதுவாக முதியோர்கள் (80 வயதிற்கு மேற்பட்டவர்கள்) மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தங்களது இல்லத்திலிருந்து அவர்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று மீண்டும் வீடு திரும்புவதற்கு இலவச சவாரி சேவையை தர “ஊபர்” நிறுவனம், இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளது.

எனவே வருகின்ற சட்டமன்ற பொது தேர்தல்கள் 2021-ல் மேற்படி இலவச சவாரி சேவையை சென்னை திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் ஊபர் நிறுவனம் வழங்க உள்ளது. மேற்கண்ட வாக்காளர்களுக்கு அவர்களது வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு சென்று திரும்பும் வகையில், இலவச சவாரியானது, குறைந்தபட்சம் 5 கி.மீ தூரத்திற்குட்பட்டு பயண கட்டண அளவில் ரூ 200 வரை 100 சதவீதம் கட்டண தள்ளுபடியுடன் அளிக்கப்படும்.

சவாரி செய்வோர் கைபேசியின் மூலம் “ஊபர்” செயலி (Uber App) வழியாக இலவசசவாரிக்கு முன்பதிவு செய்ய வேண்டும். எனவே, 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் ஆகியோர் விருப்பத்தின்பேரில், இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு, தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest