அனிதா ட்வீட்டுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை; யாரோ எனக்கு தெரியாமல் பதிவிட்டுள்ளனர்- அமைச்சர் விளக்கம்..!
அனிதா குறித்து பதிவு செய்யப்பட்ட வீடியோவிற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம் கொடுத்த்துள்ளார்.
நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதா தற்கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில், அதிமுகவிற்கு அனிதா ஆதரவு தெரிவிப்பது போல வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து, அனிதா சகோதரர் மற்றும் பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ட்வீட்டர் கணக்கிலிருந்து வீடியோவை நீக்கினார்.
பிணத்தை உண்டு வாழும் புழுவை விட மோசமானவர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் – அனிதா சகோதரர்..!
இது குறித்து மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டுள்ள வீடியோவில், அனிதா குறித்து எனது ட்வீட்டரில் பதிவு செய்யப்பட்ட வீடியோவிற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னுடைய அனுமதி இல்லாமல் அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவிட்டது யார் என்பது குறித்து சைபர் கிரைமில் புகாராளித்து நடவடிக்கை எடுக்கப்படும். எந்த நிலையிலும் யாரையும் அவதூறு செய்யும் எண்ணம் எனக்கில்லை.
— Pandiarajan K (@mafoikprajan) April 4, 2021