ஒருநாள் கொரோனா பாதிப்பு.. பிரேசில், அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 93,249 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,24,85,509 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் முதல் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக, நாள் ஒன்றுக்கு 90,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை மத்திய, மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 24 மணிநேரத்தில் 93,249 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,24,85,509 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனாவில் இருந்து மீண்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,16,29,289 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6,91,597 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 513 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,64,623 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், தடுப்பூசி எடுத்துக்கொண்டோரின் எண்ணிக்கை 7,59,79,651-ஐ கடந்துள்ளது, சற்று ஆறுதலிக்கிறது.
இந்நிலையில், கொரோனா ஒருநாள் பாதிப்பில் பிரேசில், அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அந்தவகையில், கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் சுமார் 66 ஆயிரம் பேரும், பிரேசிலில் 41 ஆயிரம் பேரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.