காற்றழுத்த தாழ்வு நிலை – 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!

வங்கக் கடல் மற்றும் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, அடுத்த 24 மணிநேரங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.
இதனால், மீனவர்கள் அடுத்த 3 நாள்களுக்கு தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி, நாகை, காரைக்கால், தூத்துக்குடி மற்றும் எண்ணூர் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுஏற்றப்பட்டுள்ளது.
மேலும், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக தமிழகத்துக்கு நேரடியாக மழைக்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025