கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரை உங்களுக்காக உழைப்பேன் – அமைச்சர் விஜயபாஸ்கர்
மக்களுக்கு பணியாற்றுவதே எனது கடமை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. அந்த வகையில், விராலிமலை தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார்.
அப்போது பேசிய அவர், நான் உங்களிடம் கூறும் ஒரு விஷயம், என்னுடைய கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரை உங்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன், கொடுத்துக் கொண்டே இருப்பேன். எல்லா காலத்திலேயும் உங்களுக்கு கொடுப்பேன், உழைப்பேன். செய்வேன், பணியாற்றுவேன். மக்களுக்கு பணியாற்றுவதே எனது கடமை என தெரிவித்துள்ளார்.