இந்த 7 விஷயங்கள் உங்களிடம் உள்ளதா…? அப்ப நீங்க தைரியசாலி தான்…!

Default Image

தைரியசாலியாக இருப்பவர்களிடம் இந்த 7 பண்புகள் காணப்படும்.

தைரியம் என்பது, பயமில்லாமல் இருப்பது அல்ல.  ஆனால், அந்த பயத்தை கையாளும் விதம் தெளிவாக, சரியான முறையில் காணப்பட வேண்டும். அப்படி சிலர் எந்த காரியத்தையும், பயமில்லாமல் தைரியமாக மேற்கொள்ளவர்கள். தற்போது இந்த பதிவியில் அப்படிப்பட்டவர்களிடம் என்னென்ன பண்புகள் இருக்கும் என்பது பற்றி பார்ப்போம்.

பயத்தை பார்க்கும் விதம்

ஒரு நாள் மதியம் நீ சுடுகாட்டின் வழியாக நடந்து செல்கிறாய். அப்போது பயம் ஏற்படுடவில்லை. அதேசமயம் ஒரு இரவு அதன் வழியாக நடந்து செல்கிறாய் அப்போது பயப்படுகிறாய். இவ்வாறு பயத்தை எந்த வடிவில், எங்கிருந்து எப்படி பார்க்கிறாய் என்பது அவசியம்.

இல்லை என்பதையே பேசுவது

நம்மிடம் இல்லாத ஒன்றை குறித்து கவலைப்பட்டு, இல்லையே, இல்லையே என்று கவலைப்படக் கூடாது. நம்மை சுற்றி உள்ளவர்களை பார்க்கும்  போது,எத்தனையோ பேர் 2 கை, கால்கள்  இல்லாமல், பல வித நோய்களுடன் காணப்படுகின்றனர். அப்படி, இல்லை என்று  கவலைப்படாமல்,இருப்பதை எண்ணி மகிழ்ச்சியாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

சிந்தையை மாற்றுவது

நமக்கு பயம் அல்லது கவலையை கொண்டு வருவது நம்முடைய சிந்தனை தான். அப்படிப்பட்ட சமயங்களில், நம்முடைய சிந்தனையை மாற்றி கொள்ள தெரிய வேண்டும்.

ஏற்றுக்கொள்ளுதல்

தைரியசாலிகளை பொறுத்தவரையில், அவர்களிடம் தன்னை தானே ஏற்றுக் கொள்ளும் பண்பு அதிகமாக காணப்படும். உங்களிடம் உள்ள குறைகள் மற்றும் மாற்ற முடியாத காரியங்களை ஏற்றுக் கொள்ள பழகுங்கள்.

நீதியான செயல்

எந்த ஒரு செயலாக இருந்தாலும், நீதியான, நியாயமான விஷயங்களை மட்டுமே செய்பவராக இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களிடம் பயம் இருக்காது.

தன்னை தானே ஊக்குவித்தல்

தைரியசாலியாக இருப்பவர்கள், தன்னை மற்றவர்கள் ஊக்குவிக்க வேண்டும் அல்லது மற்றவர்கள் தனக்கு ஆறுதல் கூற வேண்டும் என விரும்பமாட்டார்கள்.

லட்சியத்திற்காக வாழ்க்கையை அர்பணித்தல்

 வாழ்விலும் ஒரு லட்சியம் இருக்கும். இந்த இலட்சியத்தை அடைய, தைரியசாலிகளாக இருப்பவர்கள், தங்களது வாழ்க்கையை அர்ப்பணிக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்