பெண்களை இழிவுபடுத்துகிறார்கள் என்று சொல்ல பிரதமர் மோடிக்கு கூட அருகதை இல்லை…! – திருமாவளவன்

பெண்களை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இழிவுபடுத்துகிறார்கள் என்று சொல்லுவதற்கு பிரதமர் மோடிக்கு கூட அருகதை கிடையாது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். நிருபர்கள் அவரிடம், திமுக பெண்களை இழிவுபடுத்துவதாக கூறி பாஜக கட்சியினர் வாக்கு சேகரிக்கிறார்கள். இது உங்களது உங்களுடைய கூட்டணியின் வாக்கு சதவிகிதத்தை பாதிக்கும் என நினைக்கிறீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலளித்த அவர், பாஜக எப்போதுமே மக்களுடைய பிரச்சனைகள், அவர்களுடைய தேவைகள் குறித்து பேசுவதில்லை. எது உணர்ச்சிபூர்வமான பிரச்சனையோ அதை தான், கையிலெடுத்து வாக்கு வங்கியாக மாற்ற முயற்சித்து வருகின்றனர். பெண்களை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இழிவுபடுத்துகிறார்கள் என்று சொல்லுவதற்கு பிரதமர் மோடிக்கு கூட அருகதை கிடையாது.
பெண்களை இழிவுபடுத்துகிறார்கள் என்னு கூறி, அரசியல் ஆதாயம் தேட விரும்புகிறார்கள். இந்த அரசியல் யுக்தி தமிழ்நாட்டில் எடுபடாது என்றும், சாதி மாறும் மதத்தின் பெயரால், பாஜக தமிழகத்தை கூறு போட பார்க்கிறது என்றும், திமுக கூட்டணி சமூக நீதிக்கானது, ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கோடுதான் இந்த கூட்டணியை கட்டமைத்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025