3 லட்சத்திற்கும் அதிகமானோரால் பதிவிறக்கம் செய்யப்பட்ட மநீம வேட்பாளர் பத்ம பிரியாவின் பிரமாண பத்திரம்…!
முறை மநீம கட்சி சார்பில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் பத்ம பிரியாவின் பிராமண பத்திரத்தை, 3,03,248 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், சொத்து, வழக்கு உள்ளிட்ட விவரங்களை பிராமண பத்திரமாக தாக்கல் செய்வார். அதனை தேர்தல் ஆணையத்தின் இணையதள பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதில், ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் எவர் வேண்டுமானாலும் புகார் தெரிவிக்கலாம்.
அந்த வகையில், இந்த முறை மநீம கட்சி சார்பில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் பத்ம பிரியாவின் பிராமண பத்திரத்தை, 3,03,248 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும், எடப்பாடி பழனிசாமி பத்திரத்தை 6,879 பேரும், மு.க.ஸ்டாலின் பத்திரத்தை 4,351 பேரும், கமலஹாசன் பத்திரத்தை 15,563 பேரும், சீமான் பத்திரத்தை 10,261 பேரும் பதிவிறக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.