இன்றைய (02.04.2021) நாளின் ராசி பலன்கள்..!
மேஷம்: வாழ்வில் முன்னேறுவதற்கு உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்.ஒருவருக்கொருவர் அனுசரனையாக நடந்து கொண்டால் உறவின் பிணைப்பு வலுப்படும்.
ரிஷபம்: உங்களிடம் காணப்படும் ஆர்வம் காரணமாக நீங்கள் இன்று செயல்களை விரைந்து முடிப்பீர்கள். உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
மிதுனம்: இன்று பலன்கள் கலந்து காணப்படும். அமைதியாக இருந்தால் கவனமாக செயலாற்றலாம்.இதனால் உறவில் மகிழ்ச்சி நிலவும்.
கடகம்: நம்பிக்கையுடனும் அமைதியுடனும் இருக்க வேண்டும்.இதனால் எல்லாவிதமான பிரச்சினைகளையும் சமாளிக்கலாம். இன்று நேரத்தோடு செயல்பட வேண்டியது அவசியம்.
சிம்மம்: நேர்மறை எண்ணம் மற்றும் நட்பான அணுகுமுறையை மேற்கொள்ளுங்கள்.கவனமின்றி செயல்பட்டால் பணியும் தரம் குறையும்.இதன் மூலம் நிதியின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முடியும்.
கன்னி: இன்று சௌகரியமாக இருப்பீர்கள்.உங்களிடம் மறைந்திருக்கும் ஆற்றல் வெளிப்பட்டு அனைவரின் பாராட்டையும் பெறும்.
துலாம்: இன்று மிகவும் சிறப்பான நாள். உங்கள் பேச்சில் தெளிவு காணப்படும். உங்கள் பேச்சாற்றல் மூலம் சாதிப்பீர்கள்.உங்கள் தாயின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய நேரும்.
விருச்சிகம்: இன்று சிறப்பாக யோசித்து செயல் பட வேண்டியது அவசியம். தேவையற்ற எண்ணங்களை மனதில் கொள்ளாதீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
தனுசு: ஆரம்பத்தில் சில தடைகள் காணப்படும். உங்களின் தைரியத்தைக் கொண்டு சமாளிப்பீர்கள்.அதற்கு முயன்றால் உறவின் பிணைப்பு வலுப்படும்.உங்களிடம் இருக்கும் பணம் தேவையை விட அதிகமாக இருக்கும்.
மகரம்: வாழ்வில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பாராத விதமாக இன்று உங்களுக்கு பண வரவு அதிகமாக இருக்கும். ஊக்கத்தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.
கும்பம்: இன்று நீங்கள் விரைந்து செயலாற்றுவீர்கள். இதனால் பதட்டம் காணப்பட்டாலும் உங்களிடம் மகிழ்ச்சியும் காணப்படும்.உங்கள் துணையின் உதவியுடன் விரைந்து முடிவெடுக்க விரும்புவீர்கள். நல்ல தொடர்பு காணப்படும்.
மீனம்: இது வெற்றியை அளிக்கும். பிரார்த்தனை மூலம் மன அமைதி பெறுவீர்கள்.இன்று பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். குறைவாக செல்வழிக்க வேண்டும்.