இயக்குநர் சங்கர் பிற படங்களை இயக்க தடை விதிக்க முடியாது..,உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ..!
இயக்குநர் சங்கர் பிற படங்களை இயக்க கூடாது என இடைக்காலத் தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியன் 2 படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்கும் வரை பிற திரைப்படங்களை இயக்க கூடாது என லைக்கா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. மேலும், கமலஹாசன் நடிப்பில் 80% வரை இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்துள்ளது.
இந்தியன்-2 ரூ.150 கோடி பட்ஜெட் போடப்பட்ட நிலையில், ரூ.236 கோடி வரை செலவாகி உள்ளது என லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஷங்கருக்காக ரூ.40 கோடி சம்பளத்தில் ரூ.14 கோடியை கொடுத்துள்ளோம் மீதியை கோர்ட்டில் செலுத்த தயார் என லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இயக்குனர் ஷங்கர் பிற படங்களை இயக்க தடை இல்லை எனவும் இயக்குனர் ஷங்கர் பதிலளிக்க உத்தரவிட்டு லைக்கா நிறுவன வழக்கை ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.