அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை….! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.512 அதிகரித்து, ஒரு சவரன் நகை ரூ.33,808-க்கு விற்பனையாகிறது.
சமீப நாட்களாக தங்கம் விலை, அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.512 அதிகரித்து, ஒரு சவரன் நகை ரூ.33,808-க்கு விற்பனையாகிறது.
மேலும், கிராமுக்கு ரூ.64 அதிகரித்து, ரூ. 4,226-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் அதிகரித்து ரூ.88.50-க்கு விற்பனையாகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரிப்பு இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.