நீங்கள் ‘லிப் சர்வீஸ்’ மட்டுமே செய்துள்ளீர்கள்…! கமலை ஆபாசமாக விமர்சித்த வானதி சீனிவாசன்…!
நடிகர் கமலஹாசன் இத்தனை நாட்கள் லிப் சர்வீஸ் மட்டுமே செய்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமலஹாசன் அவர்கள் போட்டியிடுகிறார். இருவரும் பிரச்சாரத்தின் போது மாறி, மாறி ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஒரு சில நாட்களுக்கு முன் கமல் வானதியை ‘துக்கடா அரசியல்வாதி’ என விமர்சித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், வானதி சீனிவாசன் பரப்புரையில் போது, நடிகர் கமலஹாசன் என்னை பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று கூறுகிறார். அவர் இத்தனை நாட்கள் லிப் சர்வீஸ் மட்டுமே செய்துள்ளார். லிப் சர்வீஸ் என்பதை நீங்கள் இரண்டு அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளலாம். ஒன்று, உதட்டளவில் சேவை செய்வது, மற்றோன்று உதட்டுக்கு சேவை செய்வது. இப்படிப்பட்ட நீங்க என்னை பார்த்து ‘துக்கடா அரசியல்வாதி’ என்று கூறலாமா? என ஆபாசமான முறையில் விமர்சித்துள்ளார்.