கர்ணன் படத்தின் ‘வுட்றாதீங்க யப்போவ்’ பாடல் வெளியீடு..!!
கர்ணன் படத்தில் இடம்பெற்ற 4 பாடலான வுட்றாதீங்க யப்போவ் பாடலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் கர்ணன். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில் தற்போது படத்தின் நான்காவது பாடலான “வுட்றாதீங்க யப்போவ்” என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள்.
இந்த பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகள் மற்றும் பாடகியான தீ பாடியுள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் எழுதியுள்ளார். இந்த பாடல் தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது.
Presenting the breath taking #UttradheengaYeppov கர்ணனின் யுத்தம் ???? sung by @talktodhee & @Music_Santhosh from @dhanushkraja ‘s #Karnan ⚔️
▶️https://t.co/4uF5gZBzbBLyrics by @mari_selvaraj himself ✍️@theVcreations @thenieswar @EditorSelva @rajishavijayan @KarnanTheMovie pic.twitter.com/cwMQcSLYhT
— Think Music (@thinkmusicindia) March 31, 2021