வன்னியருக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டம் நிரந்தரமானது – ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுத்த ராமதாஸ்

Default Image

வன்னியருக்கான 10.5% உள்ஒதுக்கீடு தற்காலிகமானதென ஓபிஎஸ் பேசிய நிலையில் ராமதாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

இன்று பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளித்திருப்பது இடைக்கால ஏற்பாடு, இறுதியானது அல்ல, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு நிரந்தரமான உள் ஒதுக்கீடு அளிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், வன்னியருக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டம் நிரந்தரமானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பதிலடி கொடுத்துள்ளார். சமூகநீதி குறித்து புரிதல் இன்றி சிலர் பேசி வருவதாக விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டால் அது நிரந்தரமான சட்டம்தான். வன்னியருக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்தை நீக்க முடியாது என்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்ட பின் அது 15 சதவீதம் ஆகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் பழனிச்சாமிடம் சற்று முன் நான் தொலைபேசியில் பேசிய போதும் கூட, வன்னியர் இடஒதிக்கீடுக்காக இயற்றப்பட்ட சட்டம் நிரந்தமானது தான் என்றும் சட்டங்களில் தற்காலிக சட்டம் எதுவும் இல்லை என்பதை அவர் உறுதி செய்தார் என கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் முதல்வர் தெளிவாக இருக்கிறார். அனைத்து சமூகங்களுக்கும் மக்கள்தொகை அடிப்படையில் இடப்பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்