கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவியது இப்படி தான்…! கசிந்தது தகவல்…!
பூனைகள் மூலம் கூட மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருக்கலாம்.
கடந்த 2019 இறுதியில் கொரோனா வைரஸ் ஆனது பரவ தொடங்கியது. இந்த வைரஸ் முதலில் சீனாவில் தான் கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த வைரஸ் ஆனது மற்ற நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வந்த நிலையில், இதனை தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியது.
தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், மற்றொரு பக்கம் இந்த வைரஸ் எவ்வாறு பரவியது என்பது குறித்து ஆய்வுகளை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வந்தனர். சீனாவில் இதுகுறித்து உலக சுகாதார மையம் ஆய்வு மேற்கொண்டது. மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட உள்ளது. இதில் சில தகவல்கள் தற்போது கசிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த தகவலின் அடிப்படையில், வெளவால்கள் இடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்றும், பூனைகள் மூலம் கூட மனிதர்களுக்கு இந்த வைரஸ் தொற்றி இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.