வங்க கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம்..!!
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சியானது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகவுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உறுமாறும் காரணத்தால் தென்காசி, குமரி, நெல்லை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்ட மலைப்பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதைபோல், கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி ஆனது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும்.இன்றும் நாளையும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.