நேபாள இராணுவத்திற்கு 1 லட்சம் தடுப்பூசிகளை பரிசளித்த இந்திய ராணுவம்…!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சம் தடுப்பூசிகளை இந்திய ராணுவம் நேபாள ராணுவத்திற்கு பரிசளித்துள்ளது.
கடந்த ஓராண்டாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்தது. தற்போது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சம் தடுப்பூசிகளை இந்திய ராணுவம் நேபாள ராணுவத்திற்கு பரிசளித்துள்ளது.
ஏர் இந்திய விமானத்தில் கொண்டு வரப்பட்ட தடுப்பூசிகளை இந்திய ராணுவ அதிகாரிகள் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் நேபாள இராணுவத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் கூறியதாவது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சம் தடுப்பூசிகள் நேபாள ராணுவத்திற்கு பரிசு அளிக்கப்பட்டுள்ளதாகவும், இது ராணுவத்தினருக்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக இந்தியா, நேபாளத்திற்கு மருந்துகள் மற்றும் சோதனைக் கருவிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.