வேகமெடுக்கும் கொரோனா.., 26 நாட்களில் 472 குழந்தைகளுக்கு கொரோனா.!
பெங்களூருவில் இந்த மாதம் 10 வயதிற்குட்பட்ட 472 குழந்தைகளுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பெங்களூரில் கொரோனாபாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தற்போது அதிகமான இளம் குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த மாதம் 10 வயதிற்குட்பட்ட 472 குழந்தைகளுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வார இறுதியில் இந்த எண்ணிக்கை 500-ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது அலை குழந்தைகளை கடுமையாக தாக்கியுள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். கடந்த ஆண்டைப் போலல்லாமல், பலர் தற்போது வெளியில் நேரத்தை நேரத்தை செலவிடுகிறார்கள். இதனால், கொரோனா பரவும் வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.
இந்த மாதத்தில் 472 பேரில் 244 சிறுவர்கள் மற்றும் 226 சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் முகமூடிகளை அணியச் செய்வது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது கடினம் என்றும் பள்ளிகள் திறப்பதும், பொது இடங்களில் மக்கள் கூடுவதே இதற்கு காரணம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.