மண்புழு எடுக்க தோண்டிய 6 வயது சிறுவனுக்கு அடித்த மில்லியன் ஜாக்பாட்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சித் என்ற 6 வயது சிறுவன் இங்கிலாந்திலுள்ள பஸ்ட் மிட்நைட் பிராந்தியத்தில் வசித்து வருகிறார்.இங்குள்ள தனது வீட்டு தோட்டத்தில் எதற்ச்சையாக தோண்டிய பொழுது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய புதை படிவத்தை கண்டுபிடித்துள்ளார்.
இது குறித்து அந்த சிறுவன் கூறுகையில் “நான் புழுக்கள் மற்றும் மட்பாண்டங்கள் மற்றும் செங்கற்கள் போன்றவற்றிற்காக தோண்டிக் கொண்டிருந்தேன், இந்த பாறையின் குறுக்கே ஒரு கொம்பு போல தோற்றமளித்தது, ஆனால் அது உண்மையில் பவளத்தின் ஒரு துண்டு இது ஹார்ன் பவளம் என்று அழைக்கப்படுகிறது, “என்று பள்ளி மாணவர் கூறினார்.
பிபிசி அறிக்கையின்படி, அவரது தந்தை விஷ் சிங் பேஸ்புக்கில் உறுப்பினராக இருக்கும் ஒரு புதைபடிவ குழு மூலம் கொம்பு பவளத்தை அடையாளம் காண முடிந்தது, மேலும் புதைபடிவம் 251 முதல் 488 மில்லியன் ஆண்டுகள் வரை பழமையானது என்று மதிப்பிடுகிறது.