#IT Raid : அதிமுக எம்.எல்.ஏ-வின் ஊழியரிடம் இருந்து ரூ.1 கோடி பறிமுதல்…!
மணப்பாறை தொகுதியில் போட்டியிடும் அதிமுக எம்.எல்.ஏ சந்திரசேகரின் ஊழியர், அழகர்சாமி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அந்த வகையில், அரசியல் கட்சியினர் தீவிரம் கட்டுவது போல், வருமான வரித்துறை அதிகாரிகளும், தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மணப்பாறை தொகுதியில் போட்டியிடும் அதிமுக எம்.எல்.ஏ சந்திரசேகரின் ஊழியர், அழகர்சாமி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அவரது வீட்டில் இரவு 10 மணி முதல் விடிய விடிய சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், அழகர்சாமி வீட்டில் ரூ.500 கட்டுகளாக இருந்த ஒரு கோடி ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.