#NZvBAN: பங்களாதேஷ் அணியை ஒயிட் வாஷ் செய்து ஒருநாள் தொடரை கைப்பற்றிய நியூஸிலாந்து!

நியூஸிலாந்து – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணியை ஒயிட் வாஷ் செய்தது நியூஸிலாந்து அணி.
நியூஸிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பங்களாதேஷ் அணி, 3 ஒருநாள், 3 டி-20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரின் மூன்றாம் மற்றும் இறுதிப்போட்டி, வெல்லிங்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் எடுத்தது.
319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே சொதப்பிய பங்களாதேஷ் அணி, 42.4 ஓவர்கள் முடிவில் தனது அனைத்து விக்கெட்களை இழந்து 154 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியடைந்தது. இதன்மூலம் நியூஸிலாந்து அணி, 0-3 என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றி, பங்களாதேஷ் அணியை ஒயிட் வாஷ் செய்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025