வலிமை திரைப்படத்தின் வெறித்தனமான அப்டேட்..!!

வலிமை திரைப்படம் அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த ஒரு குடும்ப திரைப்படம் என்று தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
வலிமை திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும், அதிரடி சண்டைக்காட்சி ஒன்று வருகின்ற ஏப்ரல் மாதம் 10 நாட்கள் மட்டும் ஸ்பெயின் நாட்டில் எடுக்கப்பவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தை குறித்து படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியது ” வலிமை திரைப்படம் ஒரு வலுவான குடும்ப உள்ளடக்கத்தைக்கொண்ட ஒரு திட அதிரடி த்ரில்லர் படமாக இருக்கும். கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கும் சினிமா காதலர்களுக்கு படம் திருப்தி அளிக்கும் என்றும், தலஅஜித் பைக் ஸ்டண்ட்ஸைச்செய்ய அனைத்து கடின உழைப்புகளையும் வைத்துள்ளார்” என்று கூறியுள்ளார்.
EXCLUSIVE..????
The Most Awaited ‘#VALIMAI‘ Movie is a Solid Action Thriller With a Strong Family Content & THALA AJITH Has Put All The Hardworks To Perform The BIKE STUNTS HimSelf..????????
– Says Producer BONEY KAPOOR In PinkVilla Recent Interview! ⭐
#AjithKumar pic.twitter.com/KIZAOKBNpt
— AJITHKUMAR FANS CLUB (@TeamThalaFC) March 26, 2021
இயக்குனர் ஹெச் வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். ஜான்வி கபூர், ஹுமா குரேஷி, கார்த்திகேயா, பாவெல் நவகீதன், யோகி பாபு, வி.ஜே பானி போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் இந்த படத்திற்கு.