பெருந்துறையில் சுயேட்சையாக போட்டியிடும் தோப்பு வெங்கடாச்சலத்தின் வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்…!
பெருந்துறையில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் தோப்பு வெங்கடாச்சலத்தின் தேர்தல் வாகனத்தை, தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அத்தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் தோப்பு வெங்கடாச்சலத்தின் தேர்தல் வாகனத்தை, தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ-வாக போட்டியிட்ட இவர் தற்போது சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
இந்நிலையில், இவர் ஊத்துக்குளியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, அவரது பிரச்சார வாகனத்தை தேர்தல் அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் அனுமதி பெறாத led வாகனம் பயான்படுத்தப்பட்டது தெரியவந்ததையடுத்து, வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. பின் அவருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து, வாகனத்தை ஒப்படைத்தனர்.