#ElectionBreaking : மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது…!
மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும், அசாமில் 47 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும் மொத்தமாக 191 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அசாமில் 47 தொகுதிகளில் 264 வேட்பாளர்கள் போட்டியிடுகினறனர். திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட்-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 10,288 வாக்குச்சாவடிகளில் 73 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, வாக்களர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கையாளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இரு மாநிலங்களிலும், காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவானது, மாலை 6 மணிக்கு நிறைவடையும்.