அட இப்படியுமா காதலை வெளிப்படுத்துவீங்க…! இளைஞனின் செயலை கண்டு வியந்த கிராம மக்கள் மக்கள்…!
2.5 கிலோ மீட்டர் நீளத்தில் ‘ஐ லவ் யூ’ மற்றும் ‘ஐ மிஸ் யூ’ என்று எழுதிய இளைஞன்.
மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் உள்ள தரங்குட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் கிராமத்தின் முக்கியமான சாலையில், 2.5 கிலோ மீட்டர் நீளத்தில் ‘ஐ லவ் யூ’ மற்றும் ‘ஐ மிஸ் யூ’ என்று எழுதியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த அந்த கிராம மக்கள் வியந்து போயினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் உள்ளூர் இளைஞர்களின் செயலாக இருக்குமோ என்று சந்தேகம் கொள்கின்றனர். இதை எழுதிய இளைஞன் அவரது காதலிக்காக இத்திருக்கலாம். அதை அவரது காதலி படித்தாரா? இல்லையா? என்ற விவரம் தெரியவில்லை. ஆனால், இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.