மத்திய அரசு நிறுவனத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ..!
மத்திய அரசு நிறுவனத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக 1000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது அதிகமாக பரவிவரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் 150 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. மேலும், 300 பேருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் மாணவர்கள் மத்தியில் அதிகமாக பரவியதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.