திமுகவை வீழ்த்த வேண்டுமென்றால் என் உயிரை கொடுக்கவும் தயார் – முதல்வர் பழனிசாமி ஆவேசம்

Default Image

அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதே தனது லட்சியம் என்று பரப்புரையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சார்பில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். முதல்வர் பிரச்சாரத்தில் எதிர்கட்சியான திமுகவை விமர்சிக்கும் வகையில் உள்ளது. அதிமுக அரசின் சாதனை திட்டங்களை பட்டியலிடும் சில நேரங்களில் எதிர்கட்சியினருக்கு எதிராக ஆவேசமான கருத்துகளை முன் வைத்தும் பிரசாரம் செய்து வருகிறார்.

அந்தவகையில் இன்று காலை திருப்பத்தூர் தொகுதியில் மருது அழகுராஜை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரித்தபோது, திமுக சந்தர்ப்பவாத கூட்டணிதான் உள்ளது. அதிமுக மக்களுக்கு சேவை செய்யும் கூட்டணி. திமுக ஆட்சியில் எந்த சாதனையும் செய்தது கிடையாது என்பதால் தான் எதும் சொல்வதற்கு இல்லை. திமுக நாட்டு மக்களை பார்க்காமல் குடும்பத்தை மட்டும்தான் பார்க்கிறது. இந்த தேர்தல் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் என விமர்சித்தார்.

இதனைத்தொடர்ந்து, சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, எந்த நேரத்திலும் என்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கும் ஸ்டாலின், பிரச்சாரத்தில் திமுகவின் சாதனைகளை சொல்வதற்கு பதில், அதிமுகவை குறை சொல்வதே கொண்டே பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் என கூறியுள்ளார்.

திமுகவை வீழ்த்த வேண்டுமென்றால் என் உயிரைக் கொடுக்கவும் தயார் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார். அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதே தனது லட்சியம் எனவும் கூறினார். தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருவதால் எனது தொண்டை சரியில்லை என்றும் திமுகவை வீழ்த்த என் தொண்டை மட்டுமல்ல என் உயிரே போனாலும் பரவாயில்லை எனவும் ஹெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்