அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..!
அறப்போர் இயக்கம் மீது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு தள்ளுபடி
டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். தேர்தல் பிரச்சாரத்தில் இந்த வழக்கை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால், தம் மீது சமூக வலைதளங்களில் அறப்போர் இயக்கம் அவதூறு பரப்புவதாக கூறி எஸ்.பி.வேலுமணி தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பப்ட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அறப்போர் இயக்கத்துக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் எஸ்.பி.வேலுமணி வழக்கு தொடர்ந்துள்ளார் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
எஸ்.பி.வேலுமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பேச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என தெரிவித்தனர்.