#IPL2021: மாஸ்(க்) என்ட்ரியுடன் மும்பை வந்தடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

Default Image

ஐபிஎல் தொடரில் கலந்துகொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மாஸ்(க்) என்ட்ரியுடன் மும்பை வந்தடைந்தது.

2021-ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த போட்டி, சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மைதானங்களில் தலா 10 போட்டிகளும், அகமதாபாத் மற்றும் டெல்லி மைதானத்தில் தலா 8 போட்டிகளும் நடைபெறவுள்ளது. அதனைதொடர்ந்து இறுதிப்போட்டி மற்றும் பிளேஆஃப் சுற்று, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் கலந்துகொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி பெற்று வந்தது. சென்னை அணி, தனது முதல் போட்டியில் டெல்லி அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டி, ஏப்ரல் 10 ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள நிலையில் சென்னை அணி, மும்பைக்கு சென்றடைந்தது. அதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியது.

அந்த பதிவில், “வணக்கம் மும்பை, கனவு நகரத்திற்குள் மாஸ்(க்) என்ட்ரி” என பதிவிட்டுள்ளது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதல் ஐந்து லீக் போட்டிகளை மும்பையில் விளையாடவுள்ளது. இதனால் சென்னை அணி, மும்பையில் பயிற்சியை மேற்கொள்ளும் என அணியின் தலைமை செயல் அதிகாரி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்