பள்ளி, கல்லூரிகளுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை.!
அரசு விடுமுறைகளை மீறி பள்ளி, கல்லூரிகளை நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த கொரோனாவுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் இரண்டாவது அலை வீச தொடங்கியதால் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டது.
இதையடுத்து அரசியல் பிரச்சார கூட்டம் மற்றும் பொது இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும் என்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அரசு விடுமுறைகளை மீறி பள்ளி, கல்லூரிகளை நடத்துபவர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.