NIFT பேராசிரியர் பணிக்கு டெல்லியில் மட்டுமே தேர்வு என அறிவிப்பு..!

Default Image

NIFT  பேராசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு டெல்லியில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

NIFT எனப்படும் ஃபேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனம் இந்தியாவில் 16 இடங்களில் உள்ளன. NIFT கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் இடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஏப்ரல் 4-ம் தேதி நடைபெற உள்ளது. நாடு முழுவதிலிருந்து 1304 பேர் இந்தத் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

அனைத்து மாநிலங்களிலும் செயல்படும் கல்வி நிறுவன தேர்வு டெல்லியில் மட்டும் நடத்துவது அநீதி என தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். பெருந்தொற்று காலத்தில் நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து டெல்லிக்கு பயணிப்பது அனைவருக்கும் சாத்தியமானது அல்ல, கொரோனா காலத்தில் தேர்வெழுத டெல்லி செல்வது செலவு, சிரமம் என சென்னை, கோவை, மதுரை தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

NIFT பணித்தேர்வை டெல்லியில் மட்டும் நடத்தும் முடிவை திரும்பப்பெற தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்