இ.பி.எஸ், ஓ.பி.எஸ் பேச்சை கேட்டால், வாய் கொள்ளாத சிரிப்பு – ப.சிதம்பரம்
இவற்றைப் படித்தால் வாய் கொள்ளாத சிரிப்பு வருகிறது என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இவற்றைப் படித்தால் வாய் கொள்ளாத சிரிப்பு வருகிறது என்று கூறி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்னார், மோடி எனக்குப் பல விஷயங்களைக் கற்றுத் தந்தார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும் வேளாண் சட்டங்களையும் எப்படி ஆதரிப்பது என்று கற்றுத் தந்தாரா? ஓபிஎஸ் சொன்னார், பாஜக அரசும், அதிமுக அரசும் சிறுபான்மை சமுதாயங்களைப் பாதுகாத்துள்ளன. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிப் பாதுகாத்தீர்களா? என பதிவிட்டுள்ளார்.
OPS சொன்னார், பாஜக அரசும் அஇஅதிமுக அரசும் சிறுபான்மை சமுதாயங்களைப் பாதுகாத்துள்ளன: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிப் பாதுகாத்தீர்களா?
— P. Chidambaram (@PChidambaram_IN) March 26, 2021