கொரோனா பரவலுக்கு பின் முதல்முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி…!

வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸீனா அழைப்பின் பேரில், இன்றுமுதல் 2 நாள் பயணமாக, பிரதமர் மோடி வங்காதேசம் செல்லவுள்ளார்.
கடந்த ஓராண்டிற்கு மேலாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்த நிலையில், இந்திய பிரதமர் மோடி, வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்தார். இந்நிலையில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸீனா அழைப்பின் பேரில், இன்றுமுதல் 2 நாள் பயணமாக, பிரதமர் மோடி வங்காதேசம் செல்லவுள்ளார்.
வங்க தேசம் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும், வங்கதேச தேசிய தின விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார். கொரோனா பரவலுக்கு பின் முதன்முறையாக, பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார்.