சென்னையில் 20 வார்டுகளில் கொரோனா பாதிப்பு அதிகம்..?
சென்னை மாநகராட்சியில் 20 வார்டுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 5 நாட்களாக 1000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கஎண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது அதிகமாக பரவிவரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் 20 வார்டுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் தினசரி பரிசோதனையில் 40% பேருக்கு சென்னையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.