என் தம்பியின் வாழ்க்கைக்கும் விஸ்வாசம் படத்திற்கும் சம்பந்தம் இல்லை – சிறுத்தை சிவா..!!

Default Image

விஸ்வாசம் திரைப்படம் தன் தம்பியின் வாழ்க்கை படம் இல்லை என்று இயக்குனர் சிறுத்தை சிவா தெரிவித்துள்ளார். 

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்ககத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விஸ்வாசம். அப்பா மகள் பாச கதையை மையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் மிகவும் அருமையாக அமைந்ததால் டி.இமானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் விஸ்வாசம் திரைப்படத்தின் கதை தனது  தம்பியான பாலாவின் வாழ்க்கை வைத்ததுதான் சிவா இயக்கியதாக தகவல் பரவி வந்த நிலையில், இதுகுறித்து இயக்குனர் சிவா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ” இந்த நேரத்தில் நான் விஸ்வாசம் படத்திற்காக கிடைத்த இசை விருதை மற்றும் பற்றி பேச விரும்புகிறேன். ஆனால் இந்த படத்திற்கும் என் தம்பியின் வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தம் இல்லை” என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்